கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கு மேலும் கடன்களைப் பெறுவதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய நெருக்கடிகள்

சீனா உலக அமைப்புக்களில் அதற்குள்ள அந்தஸ்த்தையும் பணத்தையும் பயன்படுத்தி சர்வதேச நியமங்களையும் தராதரங்களையும் நிர்ணயிக்கும் வகையிலான ஆணைகளைப் பிறப்பிக்கிறது. வெளிநாடுகளிடமிருந்தும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதில் தவணை தவறுவதைத் தவிர்ப்பதற்கான உயிர்நாடியாக மேலும் நிதியுதவிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் பெய்ஜிங்கையே நாடுகிறது. இன்னொரு நிதியுதவிக்காக சீனாவிடம் வேண்டுகோளையும் விடுத்திருக்கிறது.

இலங்கைக்கு சீனா 600 மில்லியன் யுவான் நிதியுதவி | Virakesari.lk


கடந்த வாரம் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி யாங் யீச்சி கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்ட போது ஜனாதிபதியும் பிரதமரும் வரவேற்றனர். இலங்கை, அதுபெற்ற மொத்தக்கடன் 1500 கோடி டொலர்களுக்கும் அதிகமான கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கு இலங்கைக்குப் பணம் தேவைப்படுகின்றது. புதிதாக 70 கோடி டொலர்கள் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கடன்கோரிக்கை இந்த வருடம் பெய்ஜிங்கிடம் விடுக்கின்ற மூன்றாவது கடன்கோரிக்கை ஆகும். இது இலங்கையின் கடன்சுமையை மேலும் அதிகரிக்கும்.


முதலில் கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சீனா 50 கோடி டொலர்கள் உடனடிக் கடனுதவியை வழங்கியது. மே மாதமளவில் 105 கிலோமீற்றர் வீதிகளைப் புனரமைப்பதற்காக இன்னொரு 8 கோடி டொலர்களைப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை விரும்பியது.


இலங்கை சகல தரப்புக்களிடமும் கடன்பெற முயற்சித்துவிட்டு, அது பயன்தராதபட்சத்தில் இறுதியாகக் கையேந்துகின்ற நாடாக சீனா மாறிவிட்டதுபோல் தோன்றுகிறது. ஏப்ரலில் செய்யப்பட்ட மதிப்பீடொன்றின்படி இலங்கை இவ்வருடம் மாத்திரம் அதன் கடன்வழங்குநர்களிடம் இருந்து சுமார் 300 கோடி டொலர்களைப் பெற்றிருக்கிறது.


2018 ஆம் ஆண்டளவில் இலங்கை சீனாவிடம் பெற்ற கடனுதவி மொத்தமாக 500 கோடி டொலர்களாக இருந்தது. சீனாவிடம் உதவி பெறுவதன் மூலமாக கொழும்பு சர்வதேச நாணய நிதியத்தைக் கைவிடுகிறது போல் தெரிகிறது. இது முக்கியமான ஒரு நகர்வாகும்.
கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடந்த 55 வருடங்களில் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தை 16 தடவைகள் நாடியிருக்கிறது. சர்வதேச நாணயநிதியத்தின் 16 செயற்திட்டங்களில் ஒன்பதை மாத்திரமே இலங்கை பூர்த்திசெய்திருக்கிறது. அண்மைய வருடங்களில் இலங்கையின் முக்கிய கடன்வழங்குநர் என்ற அந்தஸ்த்தை சீனா பெற்றுக்கொண்டு சர்வதேச நாணயநிதியத்தை பதிலீடு செய்திருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் இலங்கை சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பல அமைப்புக்களினால் பங்களிப்புச்செய்யப்பட்ட 100 கோடி டொலர்களைப் பெற்றுக்கொண்டது.

சீனா அளித்த உதவி -நன்றி தெரிவித்த கோட்டாபய மற்றும் மகிந்த - Ibctamil


சீன வங்கி கடந்த வருடம் கொழும்பிற்கு 100 கோடி டொலர் கடனுதவியை வழங்க இணங்கிக்கொண்டது என்று இன்னொரு செய்தி மூலம் அறியக்கூடியதாக உள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் பரவல் இலங்கை அரசாங்கத்தின் வருவாயை பெருமளவிற்குப் பாதித்துவிட்டது. கடன்களைத் திருப்பிச்செலுத்துவதில் நாடுகளுக்கு இருக்கக்கூடிய ஆற்றலை மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் இலங்கையின் அந்த ஆற்றலை படியிறக்கம் செய்திருக்கின்றன. கடன்களைப் பெறுவதைத்தவிர வேறு தெரிவுகள் பெரிதாக இல்லாத நிலையில் இலங்கை இருக்கிறது.


இதுவரை பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்துவதற்கு மேலும் இலங்கை கடன்படுகின்றது. கொழும்பு இதே பாதையில் தொடர்ந்து செல்லுமாக இருந்தால் பாகிஸ்தானின் கதியே இலங்கைக்கும் ஏற்படக்கூடும். இது தெற்காசியாவில் இன்னொரு பொம்மை அரசு சீனாவிற்குக் கிடைப்பதில் போய் முடியும்.