நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  மேலும் 05 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை  3,385 பேர்  பூரண குணமடைந்துள்ளனர்.

அதனடிப்படையினல் ஹோமானம  கொரோனா சிகிச்சை நிலையத்தில் இருந்து 2 பேரும்  , தேசிய தொற்று நோயியல் நிலையத்தி இருந்தும் , ஹம்பாந்தோட்ட  மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து ஒருவரும் , வெலிகந்தை அடிப்படை முகாமில் இருந்து தலா ஒருருமாக இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் உள்ள 16 வைத்தியசாலைகளில் 14 வெளிநாட்டவர் உட்பட சுமார் 1,846 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைகள் பெற்று வருகின்ற நிலையில் , 316 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுருக்கக் கூடும் என வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,244 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் தற்போதைய நிலவரத்தின் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை பேணிய  நபர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக அதிரித்து வருகின்றதோடு , அப்பகுதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1,789  ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.