அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகல்

Published By: Digital Desk 3

16 Oct, 2020 | 03:50 PM
image

ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கொல்கத்தா அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். மேலும், அணித்தலைவர் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

 தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன்

ஐ.பி.எல்., தொடரின் 13 ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4 இல் வெற்றி 2 இல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி, மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார்.

துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் அணித்தலைவர்  பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த அணித்தலைவராக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பை வென்ற இங்கிலாந்து அணித்தலைவராக இயான் மோர்கன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37