(சசி)

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான  வீதியில்  புனாணை  பகுதியில் இடம்பெற்ற  பாரிய  விபத்தில்  இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையின்  அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 11 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

நிந்தவூரில் இருந்து  கொழும்பு  நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தும்  கொழும்பில்  இருந்து மட்டகளப்பு நோக்கி  கோழிகளை  ஏற்றிவந்த   சிறயரக லொறியொன்றும் நேருக்குநேர் மோதியே இந்த பாரிய  விபத்து ஏற்பட்டுள்ளது .

சிறியரக லொறியில் இருந்த கோழிகள்  அனைத்தும் உயிர் இழந்து வீதியோரம் முழுவதும்  வீசப்பட்டுள்ளதுடன் சிறிய ரக வாகனத்தில் பயணம் செய்த  சாரதி மற்றும் ஊழியர் இருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். 

அதி சொகுசு பேருந் து ஓரளவு  சேத்துக்கு உட்பட்டுள்ளதுடன்   சிறியரக லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்  மேற்கொள்வதுடன் சொகுசு பேருந்து பொலிசாரின்  கட்டுப்பாட்டுக்குள்  வைக்கப் பட்டுள்ளது .