கண்டி - லேவெல்ல பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் மின்தூக்கி (லிஃப்ட் ) அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

லேவெல்ல தர்மா அசோக மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலையின் மின்தூக்கியே இன்று காலை அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 57 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 55 வயதான மற்றும் ஒரு நபர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இருவம் குறித்த தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.