சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1.1 மில்லியனை நெருங்குகின்றமை அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இதுவரை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 38,918,634 ஆக காணப்படுவதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 1,098,268 ஆக பதிவாகியுள்ளது.

அதிகளவான உயிரிழப்பு பதிவான நாடுகள்: 

  • அமெரிக்கா: பாதிக்கப்பட்டோர் - 7,979,885, உயிரிழப்பு - 217,700
  • இந்தியா: பாதிக்கப்பட்டோர் - 7,370,468, உயிரிழப்பு - 112,161
  • பிரேஸில்: பாதிக்கப்பட்டோர் - 5,169,386, உயிரிழப்பு - 152,460
  • ரஷ்யா: பாதிக்கப்பட்டோர் - 1,346,380, உயிரிழப்பு - 23,350
  • ஆர்ஜண்டினா: பாதிக்கப்பட்டோர் - 949,063, உயிரிழப்பு - 25,342
  • கொலம்பிய: பாதிக்கப்பட்டோர் - 936,982, உயிரிழப்பு - 2,772
  • ஸ்பெய்ன்: பாதிக்கப்பட்டோர் - 921,374, உயிரிழப்பு - 9,876
  • பேரு: பாதிக்கப்பட்டோர் - 859,740, உயிரிழப்பு - 15,100
  • பிரான்ஸ்: பாதிக்கப்பட்டோர் - 850,997, உயிரிழப்பு - 32,876
  • மெக்ஸிகோ: பாதிக்கப்பட்டோர் - 834,910, உயிரிழப்பு - 3,180