தோள்பட்டை வலிக்கு எலக்ட்ரோ தெரபி என்ற மின் சிகிச்சையும், எக்ஸஸைஸ் தெரபி எனப்படும் பிரத்தியேக உடற்பயிற்சி மூலமான சிகிச்சையும் நல்ல பலனை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களும் தோள்பட்டை வலியால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. Calcific tendinitis மற்றும் rotator cuff tear ஆகிய இரண்டு முதன்மையான காரணங்களால் தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. 

இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். இதனைப் புறக்கணித்தால் தோள்பட்டை வலி அதிகரித்து, கைகளை இஷ்டம்போல் இயக்க இயலாது. இரவு உறக்கத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக இதற்கு தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.

தற்போது எலக்ட்ரோ தெரபி எனப்படும் மின் சிகிச்சையின் மூலமாக இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. சிலருக்கு எக்சசைஸ் தெரபி என்ற சிகிச்சையின் மூலம் இதற்கான முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. 

இதன்போது scapular stabilization exercise என்ற பயிற்சியை வழங்கி தோள்பட்டை வலி குணப்படுத்துகிறார்கள். இவ்விரண்டு சிகிச்சையின் மூலமாகவும் தோள்பட்டை வலி குணமடைய வில்லை என்றால் அவர்களுக்கு Arthroscopy என்ற சத்திரசிகிச்சை செய்து, அவர்களின் வலியை நீக்குவார்கள். இதனை மேற்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு shoulder arthritis எனப்படும் தோள்பட்டை மூட்டு தேய்மான பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு தோள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்.

டொக்டர் நரேந்திரன்.

தொகுப்பு அனுஷா.