வவுனியா பழைய பஸ் நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவரை வவுனியா பொலிசார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற நபர் ஒருவரை சோதனையிட்டனர்.

இதன்போது அவரது உடமையில் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதை அவதானித்ததுடன், குறித்த நபரை கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்

குறித்த சம்பவத்தில் அவுசதபிட்டிய பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், இன்றையதினம் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது