(எம்.எப்.எம்.பஸீர்)
கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கடந்த 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் சட்ட மா அதிபரால் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டு நேற்று மாலை 6.00 மணியாகும் போது 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு உட்பட வெள்ளவத்தை, மன்னார் பகுதிகளிலும் விஷேட தேடுத்ல்கள் நடாத்தப்பட்ட போதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும், அவருடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் முகமது யசீனையும் கைது செய்ய முடியவில்லை எனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இவ்விருவரையும் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதீப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் , அதற்கு மேலதிகமாக உளவுத் துறையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணையும் இந்த விசாரணைகளையும் மேற்பார்வை செய்யும் உயர் அதிகாரி ஒருவ்ரை சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெருவதாக சி.ஐ.டி.யின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன. ரிஷாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கி 48 மணி நேரமும் கடந்துள்ளதன் பின்னணியிலேயே அவரை இடமாற்றுவதற்கான பரிந்துரை அடங்கிய பத்திரம் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில், ரிஷாத் பதியுதீனை கைது செய்ய ஆலோசனை பிறப்பிக்கப்பட்டு இரு நாட்கள் ஆகும் நிலையில், அவர் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, நேற்று மாலை சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை தனது அலுவலகத்துக்கு அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.
சட்டத்தின் மீதான ஆட்சியை பாதுகாக்குமாறு இதன்போது சட்ட மா அதிபர், பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், சட்ட மா அதிபரின் ஆலோசனைகள், நீதிமன்ற உத்தர்வுகளை கால தாமதமின்றி நடைமுறைபப்டுத்த வேண்டும் என்பதை எச்சரித்து தெரிவித்தாதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.
இதன்போது தாமதாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதையும் சட்டமா அதிபர் சி.ஐ.டி. பிரதானிக்கு எடுத்துரைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM