அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதிதேர்தலின் பிரதான வேட்பாளரான ஜோ பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடைய  இரு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து துணை ஜனாதிபதியாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டக் எம்ஹாஃப் ஆகியோரின் பயணங்கள் மற்றும் வட கரோலினா பிரச்சார  நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

The infected individuals were on a flight with Senator Kamala Harris on October 8 - on that date Harris traveled to Arizona to participate in campaign events with Joe Biden

 ஊழியர்கள் அல்லாத விமானக் குழு உறுப்பினர் மற்றும் ஹாரிஸின் தகவல் தொடர்பு இயக்குனர் லிஸ் ஆலன் ஆகியவர்களுக்கே புதன்கிழமை இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இறுதியாக ஒக்டோபர்  8 ஆம் திகதி கமலா ஹாரிஸுடன் விமானத்தில் பயணித்துள்ளனர். 

கமலா ஹாரிஸ்  மற்றும் டக் எம்ஹாஃப்க்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட வில்லை எனினும் அவர்களின் பிரச்சார நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Two individuals with ties to Joe Biden's campaign tested positive for COVID, resulting in Senator Kamala Harris' upcoming travel to be canceled; she has tested negative

திங்களன்று மீண்டும் கமலா ஹாரிஸ்  பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனினும்  ஜோ பைடனின் திட்டங்கள் பாதிக்கப்படவில்லை.

இதேவேளை, ஜோ பைடனின் வியாழக்கிழமை மாலை நகரத்தில் தனது பிரசார நடவடிக்கையை மேற்கொள்வார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு இறுதியாக கொரோனா தொற்று பரிசோதனை முடிவு செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. அதல் அவறுக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.