பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 171 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 31 ஆவது போட்டி இன்றைய தினம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூரு மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமாகியது.

சார்ஜாவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை குவத்தது.

பெங்களூரு அணி சார்பில் ஆரோன் பின்ஞ்ச் 20 ஓட்டங்களையும், தேவ்தூத் படிக்கல் 18 ஓட்டங்களையும், விராட் கோலி 48 ஓட்டங்களையும், வேஷிங்டன் சுந்தர் 13 ஓட்டங்களையும், சிவம் டூப் 23 ஓட்டங்களையும், டிவில்லியர்ஸ் 3 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க  கிறிஸ் மொரிஸ் 25 ஓட்டங்களுடனும், உதான 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்தன் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.