சாதா­ரண கட்டியை புற்­றுநோய்க் கட்டி என தவ­றாக நினைத்த தாய்

Published By: Raam

11 Dec, 2015 | 08:43 AM
image

தனது 5 வயது மகளின் தாடையில் ஏற்­பட்­டி­ருந்த சாதா­ரண கட்­டியை புற்­று­நோய்க் கட்டி என தவ­றாக நினைத்து கடும் மன அழுத்­தத்­துக்கு உள்­ளான தாயொ­ருவர், அந்த மக­ளையும் தனது 20 மாத பெண் குழந்­தை­யையும் கத்­தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தற்­கொலை செய்து கொண்ட விப­ரீத சம்பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் குறித்து பிரித்­தா­னிய ஊட­கங்கள் வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

தென் கிழக்கு போலந்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட மார்த்தா கல்­கொவ்ஸ்கா (28 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது மகள்­மா­ரான மாஜா­வையும் ஒல்­கா­வையும் படு­கொலை செய்து விட்டு தன்னைத் தானே கத்­தியால் குத்தித் தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.

மாஜாவின் தாடைப் பகு­தியில் கட்­டியை அவ­தா­னித்து மன அழுத்­தத்­துக்கு உள்­ளான கல்­கொவ்ஸ்கா, தனது மகள் உயி­ருக்குப் போராடிக் கொண்­டி­ருப்­பதை தாங்கிக் கொள்ள தன்னால் முடி­யாது எனவும் அதனால் தான் இரு மகள்­மா­ரையும் கொன்று விட்டு தற்­கொலை செய்யப் போவ­தா­கவும் தனது கண­வ­ரிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்து அவ­ரது கணவர் அது தொடர்பில் பிர­தேச சமூக அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில் அவரை நேரில் சந்­தித்த சமூக அதி­கா­ரிகள் அவரால் அவ­ரது பிள்­ளை­களின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­பில்லை எனத் தெரி­வித்து விட்டு சென்­றி­ருந்­தனர்.

அது முதல் மேற்­படி படு­கொ­லைகள் மற்றும் தற்­கொலை இடம்­பெறும் வரை­யான ஒரு வார காலப் பகு­தியில் கல்­கொவ்ஸ்கா மன அழுத்­தத்தைத் தணி­விக்கும் மருந்­து­களை உள்ௌடுத்­து ­வந்­துள்ளார்.

இந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து மாஜாவின் உடலைப் பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­திய அதி­கா­ரிகள், அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்த கட்டி புற்­றுநோய்க் கட்­டி­யல்ல. அது சாதா­ரண கட்டி என்­பதை அறிந்­துள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தால் அந்தப் பிராந்­தி­யத்தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46
news-image

ஈரானின் ஏவுகணைகளை வீழ்த்துவதில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு...

2024-04-14 09:45:24
news-image

முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு

2024-04-14 07:18:26
news-image

ஈரான் தாக்குதல் - இஸ்ரேலின் தென்பகுதி...

2024-04-14 07:24:52
news-image

நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானதாக்குதல்கள் ஏவுகணை...

2024-04-14 06:48:31
news-image

தாயையும் குழந்தையையும் வாள்போன்ற ஆயுதத்தினால் தாக்கிய...

2024-04-13 15:35:05
news-image

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதல்...

2024-04-13 13:58:26
news-image

மனிதாபிமான பணியாளர்களிற்கு தொடர்ந்தும் ஆபத்தானதாக காணப்படும்...

2024-04-13 11:38:23
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளக்கூடிய...

2024-04-12 21:26:07
news-image

100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ்...

2024-04-12 20:28:07