இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அதிக ஆபத்துள்ள பகுதிகளை குறிக்கும் இலங்கையின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. 

சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகள் பிரிவு, ஒவ்வொரு பகுதியிலும் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், கொரோனா தொற்று அவதானம் கூடிய பகுதி ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த வரைபடம் வெளியிட்டப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைப்படத்தில் செவ்வாய்க்கிழமை வரை முடிவடைந்த கடைசி 14 நாட்களின் தரவுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இங்கு கிளிக் செய்து வரைபடத்தின் முழு வடிவத்தை பார்வையிடலாம்