காட்டாட்சியிலேயே அரசியல்வாதிகள் நீதித்துறையில் தலையிட முடியாது

Published By: MD.Lucias

20 Jul, 2016 | 09:27 PM
image

நாட்டில் நல்லாட்சி அரசு நிலவுமாயின் அரசியல் வாதிகள் பொலிஸ், நீதித்துறையில் தலையிடமுடியாத நிலை காணப்படும். அவ்வாறான நிலைமையில்லையாயின் அது காட்டாட்சியாக வர்ணிக்க முடியும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த ஆட்சியில் காட்டாட்சியே இடம்பெற்றது என்றும் குறிப்பிட்டார். 

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கு இடையில்  இடம்பெற்ற கலவரத்தில் பல மாணவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பியிருந்தனர். எனினும் ஒர் மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று  யாழ். பல்கலைக்கழகத்துக்கு குறித்த சம்பவம் தொடர்பான நிலைமையை அவதானிக்க வந்திருந்த அமைச்சர்கள் இச் சம்பவம் தொடர்பில் பல்கலைகழக நிர்வாகமே ஒழுக்காற்று நடவடிக்கயை மேற்கொள்ள வேண்டும் என்று  தெரிவித்திருந்தனர். 

குறிப்பாக அமைச்சர் அநூர பிரியதர்ஷன யாப்பா, இச் சம்பவம் தொடர்பாக வேறு எவரும் தலையீடுகளை மேற்கொள்ளமுடியாது.  எனவே நாமும் இப்பிரச்சினையில்   தலையீடு செய்யப்போவதுமில்லை என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  குறித்த தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள  மாணவனது முறைப்பாட்டுக்கமைய யாழ். நீதிவான் நீதிமன்றில் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவன் ஒன்றிய தலைவர் இன்றையதினம் முன்னிலையாகியிருந்ததுடன் உடனடியாகவே அவர் பிணையில்  செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இத்தகைய நிலையில் குறித்த மாணவனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அரசியல்வாதிகள் பொலிஸாருக்கு உத்தரவு கொடுக்கமுடியாது. அவ்வாறு உத்தரவு கொடுக்க முடியுமாயின் அது காட்டாட்சி ஆகும். அதாவது கடந்த ஆட்சியில் அவ்வாறு   காணப்பட்டிருந்தமையைக் குறிப்பிடலாம்.

நல்லதொரு ஆட்சியில் பொலிஸாரது நடவடிக்கை தொடர்பில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. பொலிஸார்  தமக்கு கிடைக்கபெறுகின்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தமது கடமைகளை அவர்கள் செய்யவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாது விட்டாலே அது பாரதுரமான குற்றமாகும். அதற்காக அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படவும் முடியும். எனவே பொலிஸாருடைய நீதித்துறையினுடைய நடவடிக்கையில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. அத்தகைய  ஆட்சியே நல்லாட்சியாகும் என்றார்.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21