தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் பிற நபர்கள் பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கொழும்பு புதுக்கடை மற்றும் உயர் நீதிமன்ற வளாகங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழக்குகள் பதிவு செய்ய, கோப்புகளை அணுக, மனுக்களை தாக்கல் செய்ய, சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் பிற சேவைகளைப் பெற சட்டத்தரணிகள் வளாகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற செயலாளர் பிரதீப் மகாமுதுகலா ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார.

நாட்டின் 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.