அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திலிருந்து நியூஸிலாந்து வரை 11 நாட்கள் நிற்காமல் பறந்து பட்டைவால் மூக்கன் பறவை (bar-tailed godwit) உலகச் சாதனைப் படைத்துள்ளது.

அத்தகைய பறவைகளின் இயங்குமுறை ஒரு போர் விமானத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது.

அது பயணம் செய்த தூரம் சுமார் 12,000 (7,580) கிலோ மீட்டர் ஆகும்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி அலாஸ்காவிலிருந்து தொடங்கிய பறவையின் பயணம் 11 நாள்களுக்குப் பிறகு நியூஸிலாந்து நாட்டின் ஒக்லாந்து நகரத்தில் நிறைவுபெற்றது.

4BBRW எனக் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் பறவையின் இடது காலில் ஒரு துணைக்கோள அடையாளக் குறியை விஞ்ஞானிகள் பொருத்தியதாக த கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

பயணத்திற்கு முன், பட்டைவால் மூக்கன் வகைப் பறவைகளின் உடல் அளவு இரட்டிப்பாகும். ஆனால், எடையைைக் குறைப்பதற்காகப் பறவையால் தன் உள் உறுப்புகளைச் சுருக்கிக்கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் 2007 இல் ஒரு பறவை எங்கும் நிற்காமல் 11,680 கிலோமீட்டர் தூரம் பறந்ததாக த கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு, நெடுந்தூரம் பறக்கும்போது பறவைகள் தூங்குவதில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.