20 க்கு  இறுதி கட்டத்தில்  எதிர் தரப்பினர்  பலர் ஆதரவு வழங்குவார்கள் - ரொஷான் ரணசிங்க

By T. Saranya

15 Oct, 2020 | 05:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வர்த்தமானியில்  வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிர் தரப்பினர் உறுப்பினர்கள் பலர் இறுதி கட்டத்தில் ஆதரவு வழங்குவார்கள். சட்டமூலவரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும் போது  திருத்ததத்தை எதிர்தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள் என காணி விவகார இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொலனறுவையில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் என எதிர்தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். கடந்த அரசாங்கத்திலேயே ஜனாதிபதிக்கும்,  பாராளுமன்றத்துக்கும் இடையில்  அதிகார பிரயோகம் தொடர்பான முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.  இந்த முரண்பாடு ஒரு கட்டத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தின.

2015 ஆம் ஆண்டு இரண்டு வேறுப்பட்ட  கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றினைந்து தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்ததால் பலவீனமான அரசாங்கம் செயற்படுத்தப்பட்டது. ஆனால் நடைமுறையில்   அவ்வாறான நிலைமை தோற்றம் பெறாது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தகிறார்கள்.

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்தினால் அரச நிர்வாகத்திற்கும், அரசாங்கத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக  நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமிருந்த பறிக்கப்பட்ட அதிகாரங்கள் 20ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதிக்கு மீள வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்தரப்பினர் தற்போது மாறுப்பட்ட கருத்துக்களை அரசியல் நோக்கம் கருதி குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் விவாதிக்கப்படும் போது எதிர்தரப்பின் பலர் ஆளும் தரப்பிற்கு சாதகமாக திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் . என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பூகோள அரசியல் போக்குகள், பொருளாதார நெருக்கடியை...

2022-09-29 19:25:15
news-image

கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க...

2022-09-29 17:36:50
news-image

ஆசிரியர் தினத்திற்கு சகோதரன் பணம் செலுத்தாமையால்...

2022-09-29 17:27:36
news-image

அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையின் எதிரொலி :...

2022-09-29 16:55:28
news-image

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன்...

2022-09-29 16:29:35
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

2022-09-29 16:11:16
news-image

முகநூல் காதல் ; காதலியின் புதிய...

2022-09-29 16:14:23
news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

மஹிந்த தலைமையில் நவராத்திரி பூஜை :...

2022-09-29 16:07:37
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34