(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நவராத்தி விழாவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 40 கோயில்களுக்கு 50000 ஆயிரம் ரூபா நிதியுதவி கோயில் பரிபாலனதரப்பினரடம் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரமதார் வழங்கி வைத்தார்.

பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடியான நிலையில் நவராத்திரி விழாவையொட்டி  தெரிவு செய்யப்பட்ட  கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது நாட்டுக்கு  நன்மை பயக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். 

மத விவகாரங்ள் என்ற அடிப்படையிலும், பிரஜை என்ற அடிப்படையிலும் இந்த மத சம்பிரதாயங்களை பாதுகாப்பது   அரசாங்கத்தினது பொறுப்பாகும்.

நெருக்கடியான நிலையில் நவராத்திரி இம்முறை ஆரம்பமாகுகிறது.  முடிவுகள் நன்மை பயக்கும் விதத்தில் அமையும் என்பதில் நம்பிக்கை கொள்கிறோம்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் சுகாதார தரப்பினர் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். கோயில்களில் இடம் பெறும் பூஜை வழிபாடுகள், நிகழ்வுகள்  சுகாதார தரப்பினர் விதித்துள்ள  பாதுகாப்பு அம்சங்களை  கடைப்பிடிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்றார்.