இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜெயின் மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கோயில் நகரத்தில் வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு நேரங்களிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உஜ்ஜெயின் பொலிஸார் விசாரணையைத் தொடங்கி, மரணமடைந்தவர்களின் உடல்களை பரிசோதனைகளுக்காக அனுப்பியுள்ளது.

அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. 

இதனை அறிந்த முதல் அமைச்சர் சவுகான் 7 பேர் மரணம் அடைந்தது பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.