முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலை கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் இன்று வியாழக்கிழமை 15.10.2020 திகதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெயைப்பேணி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அனைத்து தரப்பினராலும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை பறிக்க வேண்டாம், இலங்கையில் அதிகரித்து வரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு விரைந்து  நடவடிக்கை எடுக்கேண்டும் எனும் விடயங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முன்வைத்தனர்.