இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடைகளின் வர்த்தக நாமமான சிக்னேச்சர் (Signature), தனது புதிய காட்சியறையினை மாத்தறையில் திறந்துள்ளது. நிறுவனத்தினால் விஸ்தரிக்கப்பட்டு வரும் சிக்னேச்சர் ஸ்டூடியோ வலையமைப்பில் புதிய உள்ளடக்கமாகவும் இது அமைந்துள்ளது.

சிக்னேச்சர் வர்த்தக நாமத்தின் முன்னணியாக அமைந்துள்ள இந்த சிக்னேச்சர் காட்சியறையான இளம் தலைமுறையினருக்கு பரிபூரணமான ஆடைத் தெரிவுகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகின்றது. 181, அநாகரிக தர்மபால மாவத்தை, மாத்தறை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த புதிய சிக்னேச்சர் ஸ்டூடியோ காட்சியறையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு தெரிவுகளையும், போதியளவு இடவசதியுடன் கூடிய வாகனத் தரிப்பிட வசதியையும் கொண்டுள்ளது.

நவநாகரீகத்தில் அதிகளவு நாட்டம் காண்பிக்கும் ஆடவர்களுக்கு, பிரத்தியேகமான ஆடை அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய உயர் தரம் வாய்;ந்த சேவையும் சிக்னேச்சரினால் வழங்கப்படுகின்றது. ஆடவருக்கான ஸ்மார்ட் கசுவல், கசுவல், லினென், சூட்கள், சேர்ட்கள் (Shirts), பிளேசர்கள் மற்றும் காற்சட்டைகள் போன்றவற்றை தெரிவு செய்து கொள்ளலாம். இந்த காட்சியறையினூடாக, லெதர் (leather) தயாரிப்புகள் மற்றும் ஆடவர் அணிகலன்கள் போன்றவற்றை தமது புதிய கொள்வனவுகளுக்கு பொருத்தமான வகையில் இங்கு தெரிவு செய்து கொள்ள முடியும். விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு வசதியான சூழலை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், பரந்தளவு தெரிவுகளை இலகுவாக தெரிவு செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிக்னேச்சர் ஸ்ரூடியோ மூலமாக சிக்னேச்சர் தையல் சேவை Made-to-Order (MTO)) மற்றும் Made- to-Measure (MTM) ஆகிய சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். Made to Order (MTO) ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆடைகளை 200க்கும் அதிகளவு தெரிவுகளிலிருந்து பொருத்தமானதை பெற்றுக் கொள்ள முடியும். துணிகள், அளவுகள் மற்றும் பொருத்துகைகள் (Joints) போன்றன தெரிவுகளில் அடங்கியுள்ளது.‘Made to Measure’ (MTM) ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தமது ஆடைகளின் அளவுகளில் மாற்றங்களைச் செய்து கொள்ள முடியும் என்பதுடன் இந்த காட்சியறையில் பெண்களுக்கான ஆடைத் தெரிவுகளும் இதர வர்த்தக நாமத் தெரிவுகளும் காணப்படுகின்றன. 

சிக்னேச்சர் வர்த்தக நாம முகாமையாளர் அம்ஜாத் ஹமீத் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் மிகவும் நம்பிக்கையை வென்ற இளைஞர் வர்த்தக நாமம் எனும் வகையில், மாத்தறையில் சிக்னேச்சர் ஸ்டூடியோவை அறிமுகம் செய்வதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சர்வதேச தர நியமங்களை பூர்த்தி செய்த ஆடவர் ஆடைகளை தெரிவு செய்து கொள்ளும் வசதி மாத்தறை நகரில் ஏற்படுத்தியுள்ளோம். நாடு முழுவதிலும் சிக்னேச்சர் வர்த்தக நாமம் தொடர்பில் நாம் முன்னெடுக்கும் விழிப்புணர்வு செயற்பாடுகளில், முன்னணி நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவை மற்றும் நவநாகரீகத் தெரிவுகள் ஆகியவற்றை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றோம். இந்த காட்சியறையில் வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு சிக்னேச்சர் தயாரிப்புகளை தெரிவு செய்து கொள்ள முடியும் என்பதுடன், எந்தவொரு நிகழ்வுக்கும் அணியக் கூடிய பொருத்தமான ஆடைகள் மற்றும் அணிகலன்களை தெரிவு செய்து கொள்ள முடியும். சிக்னேச்சர் வர்த்தக நாமத்தின் கீழ் தனித்துவமான மற்றும் தரமான ஆடைத் தெரிவுகளை எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு தன்னிறைவாக நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று.” தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிக்னேச்சர், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கான பெறுமதியினை வழங்கும் வர்த்தக நாமமாக திகழ்கின்றது. இலங்கையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற ஆடவர் வர்த்தக நாமமாக இது திகழ்கின்றது. இளம் தலைமுறையினர் மத்தியில் தனித்துவமான மற்றும் நேர்த்தியான நவநாகரிக தோற்றத்தை கட்டியெழுப்புவதில் புகழ்பெற்றுள்ளதுடன், ஆடவர்களுக்கான பரந்தளவு ஆடைத் தெரிவுகளை கட்டியெழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திகழும் கனவுடன் காணப்படும் இளம் பட்டதாரிகள், நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட முகாமையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிக்னேச்சர் ஆடைத் தெரிவுகளையும் வழங்குகின்றது.