ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் மூலம் தமது அங்கத்தவர்களின் 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் விஷேட சித்திகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் 10 ஆவது வருடமும் மக்கள் வங்கியுடன் கூட்டிணைந்து நடைபெற்றது.

இதற்கான காசோலை ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தலைவர், ஷ்ரியான் டி சில்வா விஜேரத்ன அவர்களின் கரங்களால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ அவர்களுக்கு கையளித்திடும் நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பொது முகாமையாளர் பிரிமால் பர்னான்டோ, மேலதிக பொது முகாமையாளர் என். டப்ளியு. விமலவீர, மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் (செயற்பாட்டு முகாமைத்துவம் மற்றும் தரநிர்ணயஃ தனிநபர் மையப்படுத்தப்பட்ட வங்கி நடவடிக்கைகள்) ரேணுகா ஜயசிங்ஹ, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் புலமைப்பரிசில்களுக்கான அதிகாரி டப்ளியு. எல். டீ. கிரிஷாந்தி, உதவி அதிகாரி பீ.ஜீ. ஸ்ரீயாலதா, பிரதி பொது முகாமையாளர் ( அங்கத்துவ சேவைகள் ) எச். எம். செனவிரத்ன, முகாமையாளர் உதவியாளர், சஹன் ரணவீர மற்றும் அனஸ்டினா தேவப்பிரிய ஆகியோர் கலந்து கொண்டனர்.