சங்கிலித் தொடராகும் கொரோனா தொற்று 

Published By: Gayathri

15 Oct, 2020 | 11:04 AM
image

கொரோனா  தொற்று  தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் தற்பொழுது அதிகரித்துள்ளது. கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே அரசாங்கம் பாதுகாப்பு  கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. அவற்றை முறையாகக் கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  

மினுவாங்கொடை  ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பித்த தொற்று இன்று கொத்தணி தொற்றாக மாறி அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்து வருகின்றது.

நாட்டில் ஊரடங்கு சட்டம்

அமுல்படுத்தப்படாத 16 பிரதேசங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. 

சீதுவ பிரதேசத்தில் மாத்திரம் 42 பேரும் வத்தளையில் 18 பேரும் நோய்த்தொற்று தொடர்பில் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர்.  

மினுவாங்கொடை கொத்தணியுடன் சம்பந்தப்பட்ட நோய்  தொற்றாளர்கள் நாட்டில் 21 மாவட்டங்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தொற்று ' சங்கிலித் தொடராக சென்று கொண்டிருப்பதை காண முடிகின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவாசம் நாடு பூராவும் கொரோனா  தொற்று பரவி இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில்  கொரோனா  தொற்றை கட்டுப்படுத்த முடியுமா ?அல்லது நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா ? என்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.  

கொரோனா  தொற்று தொடர்பான தகவல்களை  வெளிப்படுத்தும் ஊடக சந்திப்புக்களை சுகாதார பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ள அரசு தடை செய்திருப்பது நல்லதல்ல என்று கூறியுள்ள அவர்,  அரசு இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்று பரவக் கூடிய அபாயமுள்ள பிரதேசங்களை இனங்கண்டு அவற்றுக்கிடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவிதுள்ளார்.

மார்ச் மாதத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் மிகக் குறைந்தளவான எண்ணிக்கையிலேயே அதன் மட்டம் காணப்பட்டது. 

பாரியளவிலான அதிகரிப்புக்கள் இருக்கவில்லை. இலங்கையிலுள்ள சுகாதாரத்துறையினருக்கு கட்டுப்படுத்தக் கூடியவாறாக அந்த அதிகரிப்பு காணப்பட்டது.

ஆனால், தற்போது மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை மூலமாக ஏற்பட்டுள்ள கொத்தணியானது ஒரே தடவையில் பாரியளவான அதிகரிப்பைக் கொண்டுள்ளது.

இதேபோன்று பாரியளவிலான கொத்தணிகள் ஏற்படும்போது எமது நாட்டிலுள்ள சுகாதாரத்துறையினரால் அதனை கட்டுப்படுத்த முடியாமல்போகும்.

எனவே, இதுபோன்று தொற்று அபாயம் காணப்படுகின்ற பிரதேசங்களை துரிதமாக இனங்கண்டு அந்த பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்தை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அரசாங்கம்  மக்கள் திருப்தி கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன்றைய நிலையில் பலரும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டவர்களைப் போல காணப்படுகின்றனர். எனவே அரசு துரிதமாக மக்கள் எதிர் நோக்கும் நெருக்கடிகளைப் போக்குவது அவசியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07