பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில், பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

பாணந்துறை, ஹேனமுல்லபகுதியில் நேற்றிரவு வேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, குறித்த பொலிஸ் அதிகாரி பயணித்த ஜீப் வாகனத்துடன் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளும், பொலிஸ் அதிகாரியும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.