அப்புத்தளைப் பகுதியின் கீழ் விகாரகலை என்ற இடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் குழந்தை ஒன்று ஸ்தலத்திலேயே பலியானதுடன் சாரதி உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து நேற்று 14-10-2020  மாலை 6 மணியளவில் பெரகலை – வெள்ளவாயா பிரதான வீதியின் கீழ் விகாரகலை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்றில் சாரதி உட்பட ஆறு பேர் பயணித்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 310 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன். ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள இருவர், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஏனைய மூவரும் ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து விபத்தில் பலியான குழந்தையின் சடலம் ஹல்துமுள்ளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து குறித்து ஹப்புத்தளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.