முல்லைத்தீவில் பரீட்சை அனுமதி அட்டையை சுவாமித் தட்டில் வைத்து வணங்கிய மாணவி பட விளக்கின் தீ பட்டதனால் பரீட்சை அனுமதி அட்டையை இழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள பாலிநகர் பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை வழிபாட்டிற்காக சுவாமித் தட்டில் வைத்துள்ளார்.

இதன்போது விளக்கும் ஏற்றப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டத்தில் நெருப்பு பட்டு அனுமதி அட்டை தீ பிடித்து எரிந்துள்ளது.

இதனால் மாணவி நேற்றுமுன்தினம் ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அச்சத்துடன் சென்றபோதும் உடனடியாகவே பாடசாலை நிர்வாகம் மற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களின் துரித செயற்பாட்டின் மூலம் மாணவியின் சுட்டிலக்கம் ஆள் அடையாளங்கள் என்பன உறுதி செய்யப்பட்டு பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

இவ்வாறு மாற்று ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டபோதும் இது தொடர்பில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாணவி மயக்கமுற்று வீழ்ந்தமையினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.