ஒரு குழந்தையை உலகுக்குக் கொண்டுவருவது பெற்றோருக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விடயம். அந்த மகிழ்ச்சியான பயணத்தின் ஒவ்வொரு தருணத்தின் நினைவுகளையும் கர்ப்பம் முதல் குழந்தையின் வருகை வரையில் பெற்றோர் பதிவு செய்ய ஆசைபடுகின்றனர். அத்துடன் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் மகிழ்கின்றார்கள். 

இவ்வாறு ஆசைபட்ட ஒரு கணவர், தனது மனைவி கர்ப்ப கால ஃபோட்டோஷூட்டை விரும்புவார் என்று நினைத்து,  அவருக்கு தெரியாமலே கர்ப்பகால ஃபோட்டோஷூட்களுக்காக தொழில்முறை ஒப்பனை கலைஞர், ஒப்பனையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் என அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து முடித்துள்ளார்.

எனினும் அவரின் மனைவி அதனை விரும்பவில்லை, கர்ப்பகால  படப்பிடிப்பை செய்ய மறுத்துவிட்டார்.

முன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த படப்பிடிப்பிற்காக ஏற்கனவே குறித்த கணவர் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது. இதனையடுத்து தான் செலுத்திய பணத்தை வீணடிக்க விரும்பாத அவர்  தானே கர்ப்பிணி பெண் போன்று ஒப்பனை மற்றும் அலங்காரம் செய்து கொண்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.

இதில் இவர் குழந்தையை சுமக்காவிடினும், குழந்தையின் பெயரை தமது வயிற்றில் எழுதி ஒரு தாயின் உணர்வை வெளிபடுத்தியுள்ளார். 

இவரது இந்த படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளதுடன் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். 

Pregnant wife refused the photoshoot, so the husband did it, because he  already paid for it

Pregnant wife refused the photoshoot, so the husband did it, because he  already paid for it