இலங்கையில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து Lanka QRகொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான சான்றிதழை மக்கள் வங்கி பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் முன்னிலையில் திகழும் வங்கி எனும் வகையில், மக்கள் வங்கியின் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக சந்தையில், பல்வேறு டிஜிட்டல் செயற்பாடுகளை அண்மையில் அறிமுகம் செய்ய முடிந்தது.

 இந்த வழிமுறையின் விஸ்தரிப்பாக, மக்கள் வங்கியினால் LANKAQR எனும் பொது துரித பதிலளிப்பு (QR) குறியீட்டு நியம முறை அறிமுகம் செய்யப்படும். இதனூடாக துரித, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை நாடு முழுவதிலும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட LANKAQR இனால், இலங்கை டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களில் புதிய யுகத்தினுள் பிரவேசித்துள்ளது. இந்த LANKAQR இன் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வான “நாடு முழுவதும் LANKAQR” அண்மையில் இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர். டபிள்யு. டி. லக்ஷ்மன், மக்கள் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி தம்மிக தாசவிடம் விசேட நினைவுச்சின்னமொன்றை கையளித்திருந்தார். இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் பணிப்பாளர் தர்மசிறி குமாரதுங்க இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

இந்த நிகழ்வில், வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் மீளமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், இராஜாங்க அமைச்சர்களான செஹான் சேமசிங்க மற்றும் லசந்த அழகியவன்ன, திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான ரஞ்சித் கொடிதுவக்கு ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.