யாழில் 1098 பேர் சுயதனிமைப்படுத்தல் ; க.மகேசன்

Published By: Digital Desk 4

14 Oct, 2020 | 04:05 PM
image

யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர்  சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்...

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும்  கவனமாக செயற்பட வேண்டும், யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள்  சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள்.

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. PCR பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும்  யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு இந்த கொரோணா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைவரும்  சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி  கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும் . 

தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவான 021 222 5000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு பொதுமக்கள் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெருக்கடியான நிலைமைகள் காணப்படுகின்றன.எனினும் இன்று வரை எவ்வித அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

அதுமட்டுமின்றி நாட்டு மக்களின் நன்மை கருதி அரசாங்கம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.எனவே அரசாங்கத்தினால் நிர்னயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அந்த வியாபாரிகள் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டால் உடனடியாக குறித்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நாம் நடவடிக்கைகளை எடுப்போம்.எனவே பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும்...

2024-09-18 03:33:03
news-image

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு;...

2024-09-18 03:06:28
news-image

தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை...

2024-09-18 03:18:02
news-image

51/1 தீர்மானத்தின் ஊடாக உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு...

2024-09-18 03:01:51
news-image

புதிய ஜனாதிபதி இன நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை...

2024-09-18 02:04:31
news-image

நாட்டை இருண்ட யுகத்திற்குள் தள்ளாது, நாட்டின்...

2024-09-18 00:57:43
news-image

நாட்டை அபிவிருத்தி செய்வதா? அராஜக நிலைக்கு...

2024-09-17 21:34:58
news-image

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன...

2024-09-17 21:05:09
news-image

வாய்ப்புக் கேட்கும் அரசியல்வாதிகளிடம் நாட்டை ஒப்படைத்து...

2024-09-17 22:49:09
news-image

மஹிந்த ராஜபக்ஷவுக்கு உண்மையில் நாட்டு பற்று...

2024-09-17 21:02:10
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களுக்கு ஐக்கிய...

2024-09-17 20:55:29
news-image

நோயாளி குணமடைந்து வரும் நிலையில் வைத்தியரை...

2024-09-17 21:26:06