மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பத்தலாகம பகுதி வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் உட்பட இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வீட்டின் அறையொன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதுடன் அதே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்து விட்டு சந்தேக நபர் தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை வீதி - மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஹிங்குருவௌ - எல்லவௌ பகுதியைச் சேர்ந்த 57 வயதான சந்தேக நபரே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.