பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.