15 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்! தவறவிடாதீர்கள்

Published By: Jayanthy

14 Oct, 2020 | 12:15 AM
image

விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு இன்று (புதன்கிழமை) வானில் நடைபெற உள்ளது. 

இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன.

இதேவேளை, ஒக்டோபர் 6 முதல் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளது.

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும்.  நீள் வட்ட பாதை பயணத்தில் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதனால் இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். 

இதன் காரணமாக  பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதால் தொலைநோக்கி இல்லாமல் வெற்றுக்கண்களால் நாம் செவ்வாய் கிரகத்தை இரவு வானில் பார்க்க முடியும்.

எனினும் இதனை வெற்றுக்கண்களால் தெளிவாக பார்க்கும் வாய்ப்பு ஐக்கிய இராச்சிய மக்களுக்கே கிடைத்துள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். 

இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். 

நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும். பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். 

சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பல வாரங்களுக்கு வானில் செவ்வாய் கிரகத்தை பார்க்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26