நாட்டின் தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி டயஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் அறிவிப்பு வரும் வரை ஓய்வூதியத் திணைக்கள வளாகத்திற்கு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1970 என்ற விசேட தொலைப்பேசி இலக்கத்துடன் ஓய்வூதிய திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஓய்வூதிய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஓய்வூதிய சம்பளத்தை செயற்படுத்தும் நேர்முக பரிசோதனைக்காக ஓய்வூதியக்காரர்களை அழைப்பது மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ஓய்வூதிய திணைக்களத்துக்கு வருகை தரும் அனைத்து ஓய்வூதியக்காரர்களதும் வருகையை இன்று 13ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM