கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியின் போது, சிறுவர்கள் வளர்ந்து பெரியவரானதும் தாமாக எதிர்பார்க்கும் பெருங்கனவுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ காட்சிகூடத்தினால் வித்திடப்பட்டிருந்தது.

 எதிர்பார்ப்புகள் நிறைந்த சிறுவர்களுக்கு தம்மை வைத்தியர்கள், பட்டதாரிகள், விமானிகள், பொறியியலாளர்கள் மற்றும் YouTuberகள் போன்று காட்சியளிக்கும் வகையிலான புகைப்படப் பகுதி அமைக்கப்பட்டிருந்தது. 

மேலும், அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தெரிவு, சுரண்டுங்கள் வெல்லுங்கள் போட்டிகள் மற்றும் பெற்றோருக்கு தமது பிள்ளைகளின் உயர் கல்வி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான விளக்கங்கள் காப்புறுதி ஆலோசகர்களால் வழங்கப்பட்டிருந்தது.