மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதிக்கு கொரோனா

Published By: Digital Desk 4

13 Oct, 2020 | 03:09 PM
image

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்தாகவும் தேவையில்லாமல் எவரும் வைத்தியசாலைகளுக்கோ வீதிகளிலோ செல்லவேண்டாம் எனவும்  கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்; ஒருவருக்கு கொரோனா தொற்று என சமூகவலைத்தளங்களில் வெளிவந்த செய்தியையடுத்து மக்கள் பீதியடைந்தனர். 

இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

குறித்த தாதி மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த 4 ஆம் திகதி அவர் அவரது ஊரான கம்பஹாவிற்கு விடுமுறையில் சென்ற நிலையில் அவரது கணவனின் சகோதரி பிரன்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவரை பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று கண்டுபிக்கப்பட்டது. 

இதனையடுத்து அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனையின் போது குறித்த தாதிக்கு கோரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் கொரோனா தொற்று சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து குறித்த தாதி கடமையாற்றிய பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அவருடன் கடமையாற்றியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும்  பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 10:05:04
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58
news-image

இன்றைய வானிலை

2025-04-28 06:04:54
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்; ...

2025-04-28 01:47:05
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வழிநடத்தலில் கண்டி நகரம்...

2025-04-27 22:46:34