(க.கிஷாந்தன்)

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம், லிந்துலை அக்கபரப்பத்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியிலிருந்து ஹாக்ரா பகுதியை நோக்கி வீதியில் தனியாக சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய மாணவியை பின்தொடர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர், மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

எனினும் குறித்த பாதையில் சென்ற பொதுமக்களால் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளான்.

நேற்று மாலை குறித்த இளைஞன் தனது வீட்டுக்கு வருவதை அவதானித்த பொதுமக்கள் சந்தேக நபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளதோடு லிந்துலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர் காயமடைந்துள்ளமையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 மாணவி தற்போது நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான இளைஞன் திருமணம் முடித்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.