விஜய் சேதுபதிக்கு புகழாரம் சூட்டிய முத்தையா முரளிதரன்

By T. Saranya

13 Oct, 2020 | 12:41 PM
image

விஜய் சேதுபதி மிகத் திறமையான ஒரு நடிகர். எனது சுயசரிதை படமான '800' இல் எனது பந்துவீச்சு முறையை அவர் அப்படியே சிறப்பாகச் செய்து காட்டுவார் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் '800' என்கிற திரைப்படம் உருவாகிறது. விஜய் சேதுபதி இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கி வருடக் கடைசியில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் முரளிதரன் தான். ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழில் எடுக்கப்படுகிறது. முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஒரு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸின் ப்ரீ-ஷோ கிரிக்கெட் நேரலை நிகழ்ச்சியில் பேசியிருக்கும் முரளிதரன்,

"திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்தமாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்" என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,

"முரளிதரனின் கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரைக் களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர்தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது" என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை ஆறு மணிக்கு ஐபிஎல் போட்டி இடையே படக்குழு வெளியிட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'இருவர்' முதல் 'பொன்னியின் செல்வன்' வரை...

2022-10-05 12:32:07
news-image

கதாசிரியரானார் யோகி பாபு

2022-10-05 11:23:02
news-image

'பொன்னியின் செல்வன்' பாகம் 1 -...

2022-10-04 17:22:13
news-image

சத்யராஜ் - வசந்த் ரவி இணையும்...

2022-10-04 10:53:35
news-image

நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின்...

2022-10-04 10:53:16
news-image

தேசிய விருது பெற்ற நடிகர் கிஷோர்...

2022-10-01 16:04:14
news-image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற...

2022-10-01 16:03:52
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

2022-10-01 16:03:39
news-image

நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்'...

2022-10-01 16:02:55
news-image

பொன்னியின் செல்வன் பாகம் 1 -...

2022-10-01 12:21:05
news-image

கார்த்தியின் 'சர்தார்' பட டீசர் வெளியீடு

2022-09-30 16:28:19
news-image

மேடை கோல் பந்தாட்டத்தை தமிழில் அறிமுகப்படுத்தும்...

2022-09-30 16:22:28