வவுனியா பூந்தோட்டம் சாந்தசோலை உப வீதியில் அமைந்துள்ள சைக்கிள் திருத்தகத்தை இன்று (13) அதிகாலை அடையாளம் தெரியாத விசமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

குறித்த வர்த்தக நிலையம் தீயில் எரிவதை அவதானித்த அயலவர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததுடன், நகரசபையின் தீயணைப்பு வாகனத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தனர். 

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறித்த விபத்தினால் வியாபார நிலையத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.