அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோர் பாராளுமன்றத்தில் இன்று (20) விசேட உரை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்றப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டமை தவறானது என தெரிவித்து பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  சர்ச்சைக்குரிய நிலக்கரி ஒப்பந்தம்  தொடர்பில்  உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.