யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக நீதிமன்றில் ஆஜரான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் திசிதரனை தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், இன்று புதன்கிழமை (20) அனுமதியளித்தார்.

மாணவ ஒன்றிய தலைவரால் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருதால் மாணவ ஒன்றிய தலைவர் திசிதரனுக்கு நீதிமன்றம் பிணை வழங்க கூடாது என பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் திசிதரன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, மாணவ ஒன்றியத் தலைவர் திசிதரன் எவ்வித தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என மன்றில் தெரிவித்ததை தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். 

இதேவேளை மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் பாரதூரமான விடயம் என்பதால் தற்போதைய நிலையில் மாணவ ஒன்றியத் தலைவரை கைது செய்தால் அதன் பிரதிபலன் பாரதூரமாக அமையும் என்பதால் அவரை பிணையில் விடுதலை செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.