(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக செயற்பட்ட மினுவாங்கொட பொலிஸ் நிலைய சாரதி பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து எத் தீர்மானமும் இல்லை - அஜித் ரோஹன |  Virakesari.lk

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் சாரதியாக பணிப்புரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர்  தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பி வந்து , களுத்துறை நகரத்திற்கு சென்று மது அருந்தி வீதியில் கிடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் தலைவமையகம் ,பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமைய அவர் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.