இந்தியாவின் மண்டபம் அருகே உள்ள முயல் தீவிலிருந்து இலங்கைக்கு படகில்  கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் இன்று திங்கட்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

No description available.

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல்தீவில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடலோர காவல் படை வீரர்கள் ரோந்து படகில் குழுக்களாக பிரிந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள தீவுகளில்  கண்கானிப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். 

அப்போது முயல்தீவில்  சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு மூட்டைகள் மணலில் புதைத்து வைக்கபட்டிருந்தது தெரிய வந்தது.

No description available.

 உடனடியாக மண்னை தோண்டி பார்த்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக மண்ணுக்கு அடியில் புதைக்கபட்டிருந்த  12 மூட்டைகளில் சமையல் மஞ்சள் இருந்தது தெரிய வந்ததையடுத்தது மஞ்சள் மூட்டைகளை கைபற்றிய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபத்தில் உள்ள கடலோர காவல்படை முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கைப்பற்றப்ட்ட மூட்டைகளில் சுமார் 506 கிலோ சமையல் மஞ்சள் இருந்துள்ளது.

இந்த கடத்தல் மஞ்சளை தமிழக்ததில் இருந்து கடத்தி செல்ல  இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தீவு பகுதியில் மறைந்துள்ளனரா? அல்லது தமிழகத்ததை சேர்ந்த கடத்தல்காரர்கள் கடலோர காவல்படை வீரர்கள் தீவுக்குள் வருவதை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா என்பது குறித்து கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும்  கடலோர காவல் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

No description available.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து வேதாளை, தனுஸ்கோடி, மரைக்காயர் பட்டிணம் மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்திய கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் மஞ்சள் மூட்டைகளை இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.