13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 28 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் டைர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

சார்ஜாவில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளும் 6 போட்டியில், 4 வெற்றி, 2 தோல்வி என, தலா 8 புள்ளிகளுடன் உள்ளன.

சார்ஜாவில் நடந்த சென்னை, பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து வெற்றி கண்ட உற்சாகத்தில் கொல்கத்தா அணி உள்ளது. 

அதேபோன்று சென்னை அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பெங்களூரு அணி உள்ளது. இப்போட்டியில் 90 ஓட்டங்களை விளாசிய கோலிய, மீண்டும் ரன் வேட்டையை ஆரம்பித்துள்ளார். 

ஐ.பி.எல். அரங்கில் இவ்விரு அணிகள் 24 முறை மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 14 வெற்றிகைளையும், பெங்களூரு 10 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.