(ஆர்.யசி)
கொவிட் -19 நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான கடன் திட்டத்தின் கீழ் 17,500 கோடி ரூபாய்களை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதுடன், வீழ்ச்சி கண்டுள்ள வர்த்தக, வியாபார நடவடிக்கைகளை மீட்டெடுக்க இந்த இலகு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிகின்றது.நாட்டில் கொவிட்-19 வைரஸ் பரவல் ஏற்பட்டதன் பின்னர் கடந்த ஆறு மாத காலமாக நடுத்தர தொழிலாளர், விவசாயிகள் என பலர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் நாட்டின் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பதுடன், இந்த நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீளும் விதமாக ' கொவிட் -19 வைரஸ் நெருக்கடியில் இருந்து மீண்டு செளபாகியமான நாட்டினை கட்டியெழுப்பும்" கடன் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய வங்கி ஒதுக்கியிருந்த போதிலும் தற்போது பிரதமரின் கோரிக்கைக்கு அமைய இந்த தொகையை மேலும் இரண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாய்களினால் அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானம் எடுத்துள்ளது.

அதற்கமைய 17500 கோடி ரூபாய்களை இலகு கடன் திட்டத்திற்காக மத்திய வங்கி ஒதுக்கியுள்ளது.