நடிகரும், இயக்குனருமான முருகானந்தம் 'கபாலி டாக்கீஸ்' என்ற பெயரில் உருவாகும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் ரவி சீனிவாசன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'கபாலி டாக்கீஸ்'. இந்தப்படத்தில் நடிகரும், இயக்குனருமான முருகானந்தம் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

இவர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த 'கதாநாயகன்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். 

அத்துடன் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ' மற்றும் 'மரகத நாணயம்' ஆகிய படங்களில் கொமடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். 

இவர் இந்தப் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை மேக்னா ஹெலன் நடிக்கிறார். 

இவர்களுடன் மூத்த இயக்குனரும், நடிகருமான கே. பாக்கியராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன்பாப், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சபேஷ் முரளி இசை அமைக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,

'1980-களில் தொடங்கும் கதை, 2020 முடிவடைவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று போராடும்போது இளைஞனைப் பற்றிய கதை. 

குடும்ப பின்னணியில் திரைக்கதை அமைந்தாலும் கொமடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.' என்றார்.