பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் கடமைப்புரியும் 37 வயதையுடைய சந்தேக நபரொருவரை பதுளை பிராந்திய பொலிஸ் நிலைய பொலிசாரினால் சட்டவிரோத கைத்துப்பாக்கி வைத்திருந்த குற்றசாற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2020 கைதுசெய்துள்ளார்.

இதையடுத்து குறித்த நபரை இன்று திங்கற்கிழமை 13.10.2020 பதுளை மாவட்ட நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து விசாரனை நடத்த பதுளை நீதிமன்ற நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் காரியாலய உதவியாளராக கடமைப்புரியும் 37 வயதையுடைய ஹல்துமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் நபரோருவர் பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்ட பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் களஞ்சிய அறையிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று திருடியுள்ளார்.

அவர் குறித்த கைதுப்பாக்கியை மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவருக்கு 2 இலட்சம் ரூபாவுக்கு விற்கமுயன்ற சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.