மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட குடும்ப பெண் ஒருவரை போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளனர். 

ஏறாவூர் 4ம் குறிச்சி காளிகோவில் வீதியில் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.ஏ.வஹாப் ஐ.பி. தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவு பொலிஸார்  சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட முத்துலிங்கம் மாலதி (40) என்ற பெண்ணை கைது செய்ததுடன் இவரிடமிருந்து 750 மில்லி லீற்றர் சாராயமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட குறித்த பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட சாராயம் என்பன ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

- ஜவ்பர்கான்