பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் நடால் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிசை வீழத்தி கிரண்ட்ஸலாம் பட்டம் வென்றார்.

இது நடால் வெற்றி கொள்ளும் 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் 13 ஆவது பிரான்ஸ் ஒபன் பட்டமும் ஆகும்.