அஹுன்கல்ல - வெலிக்கந்தை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அஹுன்கல்ல - வெலிக்கந்தை கடற்கரையோர ரயில் கடவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலப்பிட்டிய - பிரஹிமனவத்த பகுதியைச் சேர்ந்த சில்வா எனும் 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் மோதியே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அஹுன்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.