சீன அரசாங்கம் இலங்கைக்கு 600 மில்லயன் யுவான் நிதியுதவியை வழங்கியுள்ளதாக (16.5 பில்லியன் ரூபா) இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் ஒக்டோபர் 9 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்கு அமைவாகவே சீனா இலங்கைக்கு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.

சீனாவின் இந்த நிதியுதவிக்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

இது தவிர சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகை அடிப்படையிலான கடனை பெறுவதற்கான ஒப்பந்தத்திலும் இலங்கை விரைவில் கையெழுத்திடப்பட்டவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.